புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 400பேருக்கு முன்பள்ளி ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்கள், சிவில் பாதுகாப்பு படையில் பணியிலிருக்கின்ற நிலையில் முன்பள்ளிகளில் கற்பிப்பதற்கு நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்பள்ளி அபிவிருத்தி திட்டமானது பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தலைமையின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், யுத்தத்தின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இந்த நியமனங்களைப் பெறுகின்றனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மொழி மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின் இவர்களுக்கான பல புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.