......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

விலகுவதாக இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசா ரணை செய்வதற்காக நிய மிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகிச் செல் வதாக இருந்தால் அது எழுத்துமூல மாக சபாநாயகருக்கு அறிவிக்க வேண் டும்.

இல்லையேல் அவர்கள் விலகிச் செல்வதாக ஏற்றுக்கொள்ளப்படமாட் டாது என அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரி வித்தார். தெரிவுக்குழுவின் உறுப்பின ரான விஜித ஹேரத் எம்.பி. பாராளுமன்றத்தில் தாம் தெரிவுக்குழுவிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறியதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தெரிவுக்குழுவிலிருந்து விலகிச்செல்வதாகக் கூறும் இவர்கள் நாளையே தெரிவுக்குழுவிற்குள் வர முடியும். எனவே, எழுத்து மூலம் அறிவிக்கா மல் இவர்கள் விலகிச் செல்வதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரி வித்தார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE