......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

கிழக்கு மாகாணசபையின் 2013 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர்11 தொடக்கம் 14 வரை


images
கிழக்கு மாகாணசபையின் இரண்டாவது தடவையாக நடைபெற்ற மாகாணசபை தேர்தலுக்கு பின், அதன் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதம் கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கௌரவ டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி அவர்களின் தலைமையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதியிலிருந்து 14 ம் திகதி வரை நடைபெற உள்ளதாக கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை பேச்சாளரும வீதி அபிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
2012.12.11 ம் திகதி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின்  வரவு செலவு திட்ட  வாசிப்பைத் தொடர்ந்து, ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாண பேரவைச் செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும், பின்னர் முதலமைச்சரின் அமைச்சிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும், 2012.12.12 ம் திகதி விவசாய, கல்வி அமைச்சிகளுக்குரிய குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் 2012.12.13 ம் திகதி சுகாதார அமைச்சிற்குரிய குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும்;, 2012.12.14 ம் திகதி வீதி அபிவிருத்தி அமைச்சிற்குரிய குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.


(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE