கடந்த வாரங்களில் அம்பாறையின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதிகளில் நிறுவப்பட்ட புவி அதிர்வு கண்காணிப்பு பொறிகளின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் மனித நடவடிக்களே இந்த நில அதிர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று நாம் சந்தேகிக்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின்போது ஆழ் துளையிடுதல் நடைபெறுகின்றது. இதனாலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். எவ்வாறாயினும் எமது விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளதால் நாங்கள் இறுதி முடிக்கு இன்னும் வரவில்லை' என புவிச்சரிதவியல் சுரங்க மற்றும் ஆய்வுப் பணியகத்தின் தலைவர், கலாநிதி என்.பி.விஜயனாந்த டெய்லிமிரருக்கு கூறினார். (எல்.பி.)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.