பண்டிகைக் காலத்தையொட்டி மேலதிக பஸ்கள் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் படி 24 மணி நேரமும் செயற்படும் வகையில் நேற்று முதல் தூர இடங் களுக்கான மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியது.
உற்சவ காலத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனை கவனிக்க கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன கூறினார்.
ஜனவரி முதலாம் திகதி வரை மேற்படி விசேட பஸ் சேவை இடம்பெறும். இதேவேளை பண்டிகைக் காலத்தையொட்டி 6 மேலதிக ரயில்கள் சேவையில் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதுளை, நீர்கொழும்பு, அநுராதபுரம், களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மேலதிக ரயில்கள் ஈடுபடுத்தப்படும்.
பதுளைக்கு காலை 8.10 மணிக்கும் நீர் கொழும்புக்கு 8.30 மணிக்கும் அநுராதபுரத்திற்கு காலை 6.50 மணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். பண்டிகை காலத்தையொட்டி நேற்று முதல் மேலதிக இ.போ.ச. பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 21, 22, 24, 28, 29, 30 ம் திகதிகளில் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடும் 150 மேலதிக பஸ்கள் இதன்படி மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்படும் என இ.போ.ச. கூறியது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.