......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

போலி அமெரிக்க டொலர் நோட்டுக்களுடன் இரு வெளிநாட்டவர் கைது


பல இலட்ச ம் ரூபா பெறுமதியான போலி அமெரிக்க டொலர்களுடன் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெய கொடி தெரிவித்தார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் காலி முகத்திடலிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றுக்கு அருகில் வைத்து மேற்படி சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
காரொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போதே இவர்கள் பிடிப்பட்டுள்ளதோடு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 டொலர் பெறுமதியான 451 போலி அமெரிக்க டொலர்கள், போலி நோட்டு அச்சிடுவதற்காக பயன்படுத்தும் 420,200 கடதாசிகள், 3 கையடக்கத் தொலைபேசிகள், 20 அமெரிக்க டொலர் பெறுமதியான 2 நோட்டுகள், ஒரு டொலர் பெறுமதியான 3 நோட்டுகள், 50 யூரோ பெறுமதியான ஒரு நோட்டு, 5140 ரூபா இலங்கை ரூபாய் நோட்டுகள் என்பன மீட்கப்பட்டன.
சந்தேக நபர்கள் கெமரூன் மற்றும் மாலிநாட்டை சேர்ந்தவர்களாகும். சி.ஐ.டியினர் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE