நாடாளுமன்ற தெரிவுக்குழு அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அரசாங்கம் உடன்படாமல் விடலாம், என்பதுடன் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு நாடாளுமன்றம் கட்டுப்படாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப்பிரேரணை முன்னெடுக்கப்பட்டது. இங்கு காட்டுச்சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. அடிப்படைச்சட்டமான அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரமே குற்றப்பிரேரணை விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
தெரிவுக்குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்தவுடன் அதுதொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு ஒரு குழுவை நியமிப்பார்.
ஜனாதிபதியை தெளிவுப்படுத்துவதற்கே அந்த குழு நியமிக்கப்படும். தெரிவுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்த அறிக்கையை சபாநாயகரே ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார்.
அரசியலமைப்பின் வியாக்கியானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படும்.உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வியாக்கியானம் வழங்குவதில் வரையறை இருக்கவேண்டும். உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றம் ஏற்றசந்தர்ப்பங்களும் உண்டு ஏற்காத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
மக்களுக்கென நிகழ்ச்சி நிரல் ஒன்று இருக்கின்றது. 50 க்கு ஒன்று என்ற விகிதத்தில் ஜனநாயம் இருக்கின்றது என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. பொதுநலவாயச்சட்டம் நாட்டை நிர்வகிக்கவில்லை. எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரமே சகல விடயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.