......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 December 2012

'போமலின்' தெளித்து கஞ்சா கடத்தியவர் கைது

சடலங்கள் சிலநாட்களுக்கு பழுதடையாமலும் துர்நாற்றம் வீசாமலும்  இருப்பதற்காக தெளிக்கப்படும் 'போமலின்' தெளித்து கஞ்சா கடத்திய ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


எம்பிலிப்பிட்டியவிலிருந்து நுகேகொடைக்கு மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் ரெஜிபோமை அகற்றிவிட்டு சூட்சுமமான முறையில் மறைத்துவைத்து கஞ்சா கடத்திய போதே அவரை தெல்கந்தை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் எம்பிலிப்பிட்டியவிலிருந்து நுகேகொடைக்கு வாராந்தம் கஞ்சா கடத்துபவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனமல்விலவில் 3000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் ஒருகிலோ கிராம் கஞ்சா நுகேகொடையில் 18 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. 

'போமலின்' தெளித்தே குறித்த இளைஞன் கஞ்சா கடத்தியதாகவும் போதையை அதிகரிக்கும் நோக்கிலேயே கஞ்சாவுக்கு போமலின் தெளித்துள்ளதாக ஆரம்பக்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE