தமது பதவிக்காலத்தின் முடிவில் இங்கிரு ந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் திருமதி சீமா பலோச், அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பிரியாவிடை பெறுவதற்காக நேற்று திங்கட்கிழமை (3) முற்பகல் நீதியமைச்சில் அவரைச் சந்தித்தார்.
இதன்போது, இங்கு சிறைவாசம் அனுபவிக்கும் பாகிஸ்தான் கைதிகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் சட்டங்களுக்கும், இலங்கையின் சட்டங்களுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளதால் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனைகள், தண்டனை அனுபவிக்கும் காலம் என்பன தொடர்பில் வித்தியாசங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், பாகிஸ்தானைச் சேர்ந்த கைதியொருவர் நாடு திரும்பும் போது நிகழக்கூடியவற்றையும் விபரித்தார். மேலும் இலங்கைச் சிறைகளில் 20 பாகிஸ்தான் கைதிகள் உள்ளதாகவும், அவர்கள் போதைப் பொருள் மற்றும் வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
இதன் போது முன்னர் குற்றச் செயல்கள் தொடர்பான கைதிகள் விவகாரம் பற்றி இரு நாடுகளுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை இருந்ததாகவும், இன்றைய சூழ்நிலையில் காலமாற்றத்திற்கு ஏற்ப அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் தாம் விரைவில் பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தவுள்ள புதிய தண்டனைக் கொள்ளைச் சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள், அவற் றுக்கான தண்டனைகள் என்பன பற்றி திட்டவட்டமாக வரையறுக்கப்படுமென்றும் நீதியமைச்சர் ஹக்கீம் கூறினார்.
அத்துடன், ஏறத்தாழ ஒரேவிதமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய் யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் இந்தியா போன்ற நாடு களைச் சேர்ந்தவர்களும் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பொஸ்வானாவில் நடைபெறவுள்ள நீதியமைச்சர்கள் மாநாட் டில் பாகிஸ்தான் நீதியமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
முஸ்லிம் நாடுகளின் உல்லாச பயணி களை இலங்கைக்கு ஈர்த்தெடுக்கும் விதத்தில் இஸ்லாமிய சமய, பண்பாட்டு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் விதத்திலும் அவற்றுக்கேற்ப அவர்களுக்கான தங்குமிட வசதிகள் முதலானவற்றை செய்து கொடுப்பது பற்றி அமைச்சர் ஹக்கீம் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அபிப் பிராயத்தை கேட்டறிந்தார்.
இஸ்லாமிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளினதும் வர்த்தக சந்தைகளை (ஈர் பஸார்) முஸ்லிம்களின் பெருநாள் தினங் களை அண்டியதாக தலைநகர் கொழும்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதன் மூலம் அந்நாடுகளின் உற்பத்திப் பொருட் களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏனை யோருக்கும் கிட்டும் என்று இருவரும் ஏற்கனவே கலந்துரையாடிய விடயம் தொடர்பில் மேலும் கருத்துப் பறிமாற்றங் களை அவர்கள் மேற்கொண்டனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.