யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம். சி. மொஹம்மட் ஜெப்ரி நியமிக்கப்ப ட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் மா அதிபர் என் கே. இளங்ககோன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்குச் சென்று நேற்றுக் காலை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.எஸ்.பி. ஜெப்ரிக்கு விஷேட மரியாதை அணி வகுப்பு வழங்கப்பட்டது.
மாவனெல்லை, அரநாயக்கவைச் சேர்ந்த மொஹம்மட் ஜெப்ரி பொலிஸ் திணைக்களத்தில் 32 வருடங்களாக சேவையாற்றி வருகிறார்.
1980ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர் அம்பலங்கொட, காலி, ஹிக்கடுவை, யாழ்ப்பாணம் உட்பட பல பிரதேசங்களில் சேவையாற்றியுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆரம்ப காலத்தில் இணைந்துகொண்ட இவர் 1998, 99ஆம் ஆண்டுகளில் யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார். பின்னர் பொலிஸ் திணைக்களத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட இவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் அந்தரங்க செயலாளராகவும், பொலிஸ் நலன்புரி பிரிவின் பதில் பணிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட இவர் அதன் நடவடிக்கை பணிப்பாளராகவும், பயிற்சிகளுக்கான பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சேவையாற்றிய ஸ்ரீ குகநேசன் ஓய்வு பெற்றுக் கொண்டதையடுத்து அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.