......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 4 December 2012

உணவுப் பொருட்களின் தரத்தினை உறுதிசெய்ய தினந்தோறும் சுற்றி வளைப்புகள்


லக்ஷ்மி பரசுராமன்
* 50 பட்டதாரிகளை உள்Zர்த்து பணிகள் துரிதம்
* நுகர்வோர் தொடர்புகொள்ள புதிய இலக்கங்கள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலைகுறித்து ஆராயவென தினந்தோறும் விசேட சுற்றி வளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இச்செயற்பாட்டினை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில் பட்டதாரிகள் 50 பேரை நுகர்வோர் அதிகார சபையில் இணைத்துக்கொள்ளவி ருப்பதாகவும் தலைவர் ரூமி மர்சூக் கூறினார். தெரிவு செய்யப்பட்டிருக்கும் 50 பட்டதாரிகளும் இன்று (04) செவ்வாய்க்கிழமை முதல் நுகர்வோர் அதிகார சபையின் சுற்றிவளைப்பு அதிகாரிகளாக உள்வாங்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழங்கி வைப்பாரெனவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் நடத்தப்படும் சுற்றி வளைப்புக்களில் மேற்படி பட்ட தாரிகளையும் இணைத்துச் செயற்படுவதன் மூலம் பணிகளை துரிதப்படுத்துவதுடன் நுகர்வோர் பாதிப்படைவதனை தவிர்க்க முடியுமென நம்புவதாகவும் அவர் குறிப் பிட்டார்.
இதேவேளை நுகர்வோரிடமிருந்து உடனுக்குடன் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கென புதிதாக நான்கு இலக் கங்களுடன் கூடிய அவசர தொலைபேசி இலக்கமொன்றினை நடைமுறைப் படுத்துவதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இதன்படி 1977 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது ஏற்கனவே வழக்கத்திலுள்ள 1399146 என்ற தொலைபேசி இலக்கத்தி னூடாகவோ எமக்கு நுகர்வோர் சட்ட விதிகளை மீறிய செயற்பாடுகள் குறித்து அறியத்தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
காலாவதியான உணவுப் பொருட்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படு பவை, கட்டுப்பாட்டு விலையை மீறிய வை, மனிதப் பாவனைக்கு ஏற்ற தரத்தில் லாதவை, விலைப்பட்டியலை காட்சிப் படுத்தாமை ஆகியன குறித்து நுகர்வோர் சட்ட விதிமுறைகளுக்கமைய சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றுக்கு மேலதிகமாக தற்போது அரிசி விற்பனை தொட்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலம் ஆகையால் அரிசி தட்டப்பாட்டினை ஏற்படுத்த பல வர்த்தகர்கள் திட்டம் தீட்டி செயற்பட்டு வருகின்றனர். எனவே இவ்வாறான வர்த்தகர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளதை யிட்டு கொழும்பு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள களஞ்சியசாலைகளை விசேட சோதனைக்கு உட்படுத்தி வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.

(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE