......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

சுகாதார தேசிய வாரம் இன்று ஆரம்பம்


“தேசிய சுகாதார வாரம்” இன்று ஆரம்பமாகிறது. 17 ஆம் திகதி வரை இத்தினம் அனுஷ்டிக்கப்படும்.

“பொது மக்கள் ஊழியர்கள் தொடர்பு தின”மாக இத்தினம் பெயரிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், மாகாண சபை, பிரதேச சபை ஆகியவற்றைப் பிரதிநிதித் துவம் செய்யும் அரச, எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தத்தம் பகுதி ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று அபிவிருத்தி பணிகள் மற்றும் குறைபாடுகளை அறிந்து தமது அபிப்பிராயங்களை அறிக்கையாகத் தருமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
சகல சுகாதார நிறுவனங்களிலும் இன்று காலை 08 மணிக்கு மத நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுகாதாரச் சேவைக்கு அர்ப்பணிக்கும் உறுதியுரை வாசிக்கப்படும்.
நோயாளர்களுக்கு சுகாதார விடயங்களின் சரியான தகவல்களைப் பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சின் செயலர் டொக்டர் நிஹால் ஜயதிலக்கா ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தேசிய சுகாதார வார ஆரம்ப நிகழ்வுகள் அமைச்சர் தலைமையில் இன்று காலை சுகாதார அமைச்சில் நடைபெறும்..
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE