மர்லின் மரிக்கார்
நிமிடத்துக்கு 34,000 கன அடி நீர் அவசர வெளியேற்றம்
பொலன்னறுவை, எலஹர குளம் நிரம்பி வழிவதுடன், நிமிடத்திற்கு 34 ஆயிரம் கன அடிகள் தண்ணீர் வெளியேறுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.
அதேவேளை போவத்தென்ன, லுணுகம்வெகர, வேரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தைப் பேணும் வகையில் அவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள சகல குளங்களும் 59 சதவீதம் நீரால் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டி லுள்ள 14 குளங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்திருக்கின்றன. இதேநேரம் எலகர குளம் நிரம்பி வழிவதுடன், நிமிடத்திற்கு 34 ஆயிரம் கன அடிகள் தண்ணீர் வெளியறுகின்றது. இதன் விளைவாக வெலிக்கந்த பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் தொடர்ந்தும் மழை பெய் யும் பட்சத்தில் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தும் உள்ளன. தற்போது போவத்தென்ன நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தைப் பேணும் வகையில் அவற்றின் இரண்டு வான்கதவுகளும், லுணுகம் வெகர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், வேரகல நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.