......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

இலங்கைக்கு தேவையான அரசியல், தொழில்நுட்ப உதவியை ஆஸி வழங்கும்: பொப்


(டியான் சில்வா) 

இலங்கையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக இலங்கைக்குத் தேவையான அரசியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை அவுஸ்திரேலியா வழங்கும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்தார். 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான சகல தொழில்நுட்ப உதவிகளையும் அவுஸ்திரேலியா வழங்கும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜு.எல்.பீரிஸும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, 'இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்குப் போக வேண்டாமென கனடா அழுத்தம் கொடுக்கும் நிலையில் அவுஸ்திரேலியா, இலங்கைக்கு ஆதரவு வழங்குமா?' என கேட்டதற்கு பதிலளித்த பொப் கார்,

'கனடா மனித உரிமைகள் பற்றிய பிரச்சினை குறித்து இலங்கையுடன் பேச வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மையப்படுத்தி இலங்கையுடன் கனடா பேச முடியும்' என்றும் கூறினார். 

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குறித்த பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் நாம் இந்த செயற்பாடுகளுக்கு எமது உதவித் திட்டங்கள் மூலம் உதவி வழங்குகின்றோம் எனவும் அவர் கூறினார்.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருவோரில் பலர் பொருளாதார நோக்கில் புலம்பெயர்வோர் எனவும் அவர்களை 72 மணித்தியாலங்களில் திருப்பி அனுப்புவதற்கான கொள்கைத் தீர்மானங்களையும், அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டோம் எனவும் பொப் கார் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 'கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் என்றும் கல்விக்கான உதவியாக 34 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கும்' என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பொப் கார், இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் பல சந்திப்புக்களை மேற்கொண்டார்.(படப்பிடிப்பு - பிரதீப் தில்ருக்ஷன) 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE