ஸாதிக் ஷிஹான்
வீடொன்றில் அறையில் ஏற் பட்ட திடீர் தீ விபத்து காரண மாக ஒரே குடு ம்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமான முறையில் உயிரி ழந்துள்ளனர்.
இரத்மலானை, கல்தேமுல்ல பிரதே சத்திலுள்ள வீடொன்றின் அறையி லிருந்து தீயில் கருகி உயிரிழந்த நிலை யில் தாயும் அவரது இரு சிறு பிள்ளை களுமே சடலமாக மீட்டெடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவி த்தார்.
இந்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது: கல்தேமுல்ல, 12/2 ஆம் இலக்க வீடொன்றின் அறையில் தீயில் கருகிய நிலையில் தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் இருப்பதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேற்றுக் காலை 7.05 மணியளவில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தகவலை அடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த கல்கிஸ்சை பொலிஸார் குறித்த அறையிலிருந்து கருகிய நிலையில் சவேதனா சந்தமாலி பெர்ணான்டோ என்ற 31 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளான விஜயமுனி குஷான் சந்தரெத சில்வா என்ற 3 வயது மற்றும் விஜயமுனி குஷான் பானுக த சில்வா என்ற 1 வயது சிறுவர்களின் சடலங்களை மீட்டெடுத் துள்ளனர்.
இந்த தீ விபத்துச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கல்கிஸ்சை குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த தீவிபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.