......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

குணரத்ன வன்னிநாயக்க மீது தாக்குதல் முயற்சி!


By Kavinthan Shanmugarajah தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான குணரத்ன வன்னிநாயக்க மீது இன்று மாலை தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவவில் வைத்தே இத்தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

பிஸ்டல்களுடன் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தனது ஜீப் வண்டியை சூழ்ந்து தாக்க முயன்றதாகவும், தான் ஒருவாறு தப்பித்து வீட்டுக்குள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தான் உடனே பொலிஸ் அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொண்டதாகவும் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஃப்ரீ மார்ச் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வரும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்க விவகாரத்திலும் முன்னின்று செயற்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE