வடக்கு இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. புலி உறுப்பினர்கள் என இளைஞர் யுவதிகளை கைதுசெய்தனர். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலைச்செய்தனர். அவ்வாறானவர்களை புலியென மீண்டும் கைதுசெய்கின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கை உலகில் எங்குமே இல்லை என்று புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிஸ கட்சியின் உறுப்பினர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வேட்டையாடும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கில் இளைஞர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அந்த நிலைமை தெற்கிக்கும் வியாபிக்கும்.
இளைஞர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் வாயை அடைக்கின்ற செயற்பாடாகும். ஜனநாயகத்திற்கான குரலை வெளியில் கொண்டுவரமுடியாதவகையில் நசுகுகின்றனர். அதுமட்டுமின்றி புலி சாயமும் பூசுகின்றனர்.
புலியென்று கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் புலியென கைது செய்யப்படுகின்றனர் என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.