மறுபுறத்தில் வட கொரிய ரொக் கெட்டுகளின் பாகங்கள் தமது எல்லைக்குள் விழும் அபாயம் இருந்தால் அதனை சுட்டு வீழ்த்தும்படி ஜப்பான் அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தியோக பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
விண்வெளியில் செய்மதியை நிறுவ எதிர்வரும் 10 முதல் 22ஆம் திகதிக்குள் ரொக்கெட் ஏவவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஆனால் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையையே வட கொரியா மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
வட கொரியா கடந்த ஏப்ரலிலும் செய்மதியை நிறுவும் நோக்கில் ரொக்கெட் ஏவியது. எனினும் அது ஒரு சில நிமிடங்களில் வெடித்து சிதறி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வட கொரிய முன்னாள் தலைவர் கிம் ஜொங் இல் மரணமடைந்து ஓர் ஆண்டு பூர்த்தியடையும் தினத்தில் இந்த ரொக்கெட் ஏவப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தவிர, எதிரி நாடான தென் கொரியாவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் டிசம்பர் 19ஆம் திகதி இந்த ரொக்கெட் ஏவப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இதில் வட கொரிய ரொக்கெட் தென் பகுதி ஊடாக பயணித்து முதலாவது ரொக்கெட் பாகம் கொரிய தீப கற்பத்திலும் இரண்டாவது பாகம் கிழக்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியிலும் விழ வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இதனையொட்டி இந்த பகுதியில் அமெரிக்க யுத்த கப்பல்கள் நிறுத்தப்பட்டு அவதானிக்கப்படவுள்ளன.
ஏவுகணை இடைமறிப்பு கருவிகளுட னான மூன்று அமெரிக்க யுத்த கப்பல்கள் இந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ரொக்கெட் பயணத்தை ஒட்டி நிப்பொன் விமான சேவை தனது விமானப் பாதையை மாற்றவுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.