சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு புதுத் திட்டம் ஒன்றை நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை. விசா இல்லாமல் பீஜிங்கை வெளி நாட்டினர் சுற்றிய பார்க்கலாம். இந்த சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற வில்லை. விசா இல்லாமல் பீஜிங்கில் தங்கும் சிறப்புத் திட்டத்தில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் சேர்க்கப்படவில்லை.
இதேபோல் பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாட்டினருக்கும் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.