இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். தவிர துருக்கி மற்றும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பிரான்ஸ், பிரிட்டனும் இஸ்ரேலின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனை உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்த்தை ஐ.நா. சபை வழங்கியதைத் தொடர்ந்தே இஸ்ரேல் புதிய யூதக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.
ஐ.நாவின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்த்திற்காக கடந்த வியாழக்கிழமை பொதுச் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீன் 138 வாக்குகளை பெற்றதோடு எதிராக அமெரிக்காவின் வாக்கு உட்பட 9 உறுப்பு நாடுகளே வாக்களித்தன. 41 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இஸ்ரேலின் புதிய யூதக் குடியிருப்புகள் காரணமாக மேற்குக்கரை இரண்டாக பிளவுபடுவதாக பலஸ்தீனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 500, 000 யூதர்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே ஐ.நா.வின் தனி நாட்டுக்கான அந்தஸ்த்தை பெற்று நேற்று மேற்குக் கரை திரும்பிய பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.