......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

இலங்கை உட்பட 20 நாடுகள் மீது தடையை தளர்த்தியது அமெரிக்கா


  • ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு
  • 6 மாதங்கள் மட்டுமே அனுமதி
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி:
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங் கைக்கு அமெரிக்கா ஆறு மாதகால அவகாசம் வழங்கி தனது தடையினை தளர்த்தியுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஊர்ஜிதம் செய்தார். அமெரிக்க அரசாங்கம் 20 நாடுகளுக்கு தனது தடையுத்தரவைத் தளர்த்தியிருப்பதாகவும் அதன் மூலம் இலங்கை நன்மை அடைவதாகவும் அவர் கூறினார்.

ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையில் சிறிது மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த விவகாரங்களுக்கு முழுமையாக தீர்வு காணப்படும் வரை அமெரிக்கா அந்நாட்டுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும்.
இருப்பினும் சீனா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் ஈரானிலிருந்து அடுத்த 180 நாட்களுக்கு மட்டும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் உலக நாடுகளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா தனது தடையில் சற்று தளர்வு ஏற்படுத்தியிருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு நிம்மதி தரக்கூடியது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE