......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் முடிவுக்கு மேலிடத்து உத்தரவே காரணம்: விஜித ஹேரத்

மேலிடத்திலிருந்து வந்த தீடிர் உத்தரவிற்கு அமையவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழுவின் உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்தார்.


நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த ஜனவரி வரை கொண்டு செல்ல இணக்கம் காணப்பட்டது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இராஜினாமா செய்த அடுத்த நாளே தெரிவுக்குழுவின் இறுதி தீர்மானம் வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு அநியாயமான தீர்மானமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் - ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE