......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 135,640 பேர் பாதிப்பு

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,150 குடும்பங்களைச் சேர்ந்த 135,640 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. 


12,453 குடும்பங்களைச் சேர்ந்த 49,993 பேர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி நண்பர்கள் மற்றும்  உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடும் மழையினால் 10,971 குடும்பங்களைச் சேர்ந்த 46,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 166 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 43 வீடுகள் முழுமையாகவும் 123 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர்  கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில்  தங்கியுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE