சிரியாவில் இருக்கும் மிகப்பெரிய பலஸ்தீன அகதி முகாமான யார்முக் பகுதியில் மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து பல குடியிருப்பாளர்களும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். சிரியாவில் இருக்கும் சுமார் 500,000 பலஸ்தீனர்கள் சிரிய அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரிந்து செயற்படுகின்றனர்.
இந்நிலையில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் யார்முக் முகாமில் இருந்து பல திசைகளிலும் வெளியேறி வருவதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் அயல் நாடான லெபனானுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
சிரியாவின் தென்பகுதி நகரான டராவில் இருக்கும் பலஸ்தீன முகாம் ஒன்றையும் அரச படை சுற்றிவளைத்திருப் பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.