ஐ.நாவின் ஆதரவில் இயங்கும் போலியோ, தடுப்பு மருந்து திட்டத்தில் பணியாற்றியவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. தலிபான் அமைப்பு போலியோ தடுப்பு செயற் பாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பெஷாவர் நகரில் பெண் சுகாதார அதகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போலியோ தடுப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் முழுவதும் மூன்று தினங்களில் 5.2 மில்லியன் பேருக்கு போலியோ தடுப்பு வழங்கும் தேசிய திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பின் கராச்சியில அந்த செயற்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப் பட்டபின் போலியோ தடுப்பு செயற்திட்டத்திற்கு தலிபான்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். பின்லாடனை கண்டறிய சி. ஐ. ஏ. அமைப்பு போலியான போலியோ தடுப்பு முகாமை அமைத்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.