உலகம் அழியும் என்ற வதந்தியால் மனநிலை பாதிக்கப்பட்ட மத்திய சீனாவைச் சேர்ந்த ஒருவர் 23 ஆரம்ப பாடசாலை சிறுவர்களை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
மின் யொங்ஜுன் என்ற நபர் கடந்த வெள்ளிக்கிழமை காலை வயதான பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். பின்னர் அருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலைக்கு சென்று 23 சிறுவர்களை கத்தியால் காயப்படுத்தியுள்ளார். இவரை ஆசிரியர்கள் மற்றும் பொலிஸார் சேர்ந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்கு இடையூறு செய்த சந்தேகத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உலகம் அழியும் வதந்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே “இந்த வாரம் உலகம் அழியும்” என, துண்டு பிரசுரங்களை விநியோகித்து பீதி கிளப்பிய 93 பேர், சீனாவில் கைது செய்யப்பட்டனர். சீனாவில் “ஒல்மைட்டி காட்” என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். “இந்த வாரம் உலகம் அழிந்து விடும். எனவே, இந்த அமைப்பில் உள்ள உறுப்பி னர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் ஒப்படைத்து விட வேண்டும்” என கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள், சீனாவின் புஜியான, ஹுபி, சின்ஜியாங், குங் காய் உள்ளிட்ட பல மாகாணங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்து வருகின்றனர். உலகம் அழிந்து விடும் என, மக்களை பீதியடைய செய்ததற்காக இந்த அமைப்பை சேர்ந்த 93 பேரை, சீன பொலிஸார் கைது செய்தனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.