கொழும்பு பிரதேச செயலகத்தில் (கச்சேரி) இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால், செயலகமும் அதில் வைக்கப்பட்டிருந்த மிக முக்கியமான ஆவணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இதேவேளை, வருமான வரி தொடர்பான ஆவணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பாக விசேட மின் பொறியியலாளர் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றார். அவர் இது தொடர்பான அறிக்கையை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிப்பார் என்றும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.