......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 28 November 2012
'கடன் தொல்லையே தற்கொலைக்கு காரணம்"? கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீடொன்றிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தை உட்பட தாயும் தந்தையும் சடலமாக பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று சடலங்களை கிராண்ட்பாஸ், ஆமர்வீதி பொலிஸாரினால் கண்டறியப்பட்ட போதும் சடலங்கள் மீதான நீதிவானின் விசாரணை நேற்று இடம்பெறாமையால் சடலங்கள் இன்று முற்பகலே மீட்கப்பட்டன.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இவர்கள் இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தந்தையான சிவலிங்கம் ஸ்ரீகாந்தன், மனைவியான 24 வயதுடைய கோகிலவாணி மற்றும் அவர்களின் மகனான 2 வயதுடைய ஸ்ரீகாந்தன் சர்வேஸ் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து கடிதமொன்று மீட்கப்பட்டதாகவும் அக்கடிதத்தில் கடன் சுமையே தமது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Pics By: Sujeewa Kumar
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.