எனினும் ஆப்கானில் படைகளை தரித்து வைப்பது குறித்து அமெரிக்கா இன்னும் உத்தியோகபூர்வமாக முடிவு எடுக்கவில்லை. ஆனால் தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பிக்கு கூறும் போது 6,000 தொடக்கம் 15,000 வீரர்கள் ஆப்கானில் நிலைநிறுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த தகவலை ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நேட்டோவின் படை நடவடிக்கைகள் முற்றாக முடிவுக்கு வந்த பின்னரே எத்தனை வீரர்கள் ஆப்கானில் தரித்து வைக்கப்படுவார்கள் என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பில் இந்த மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டார் கூறியிருந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் தரித்திருக்கும் 67,000 அமெரிக்கப் படைகளும் 2014 ஆம் ஆண்டு முடிவில் வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் குறிப்பிட்ட அளவான படையை ஆப்கானில் நிலைநிறுத்த அமெரிக்கா ஆப்கான் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் அப்கான் அரசு கோரும் அளவான வீரர்களே அங்கு இராணுவ பயிற்சி மற்றும் இராணுவ நடவடிக்கைக ளுக்காக தரித்து வைக்கப்படுவார் கள் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஈராக்கிலும் இவ்வாறு படைகளை தொடர்ந்து தரித்து வைக்க அமெரிக்கா முயற்சித்த போதும் ஈராக் அரசின் அழுத்தத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.