......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

அரசியல் சாசன அறிவிப்பை மாற்றுவதில்லை என எகிப்து ஜனாதிபதி உறுதி


ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம்
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியின், ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசன அறிவிப்புக்கு எதிராக நேற்றைய தினத்திலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எனினும் முர்சிக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று நடத்தவிருந்த பாரிய ஆர்ப்பாட்டம் மோதல்களை தவிர்க்கும் நோக்கில் ரத்துச் செய்யப்ப ட்டது.
எகிப்து தலைநகர் தஹ்ரியார் சதுக்கத்தில் கூடாரமிட்டு தங்கியிருக்கும் முர்சி எதிர்ப்பாளர்களுக்கும் பொலி ஸாருக்கும் இடையில் நேற்று காலையும் மோதல்கள் இடம்பெற்றது. ‘முர்சி தனது அரசியல் சாசன அறிவிப்பை ரத்துச் செய்யும் வரை நாம் தஹ்ரியார் சதுக்கத்தில் இருப்போம்” என அங்கிருக்கும் எதிர்ப்பாளர் அஹ்மட் பஹ்மி ஏ.எப்.பிக்கு குறிப்பிட்டார்.
எனினும் தற்போதைய பதற்றத்தை தவிர்க்க ஜனாதிபதி முர்சி கடந்த திங்கட்கிழமை நீதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜனாதிபதி தமது ஆணையில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை என நீதிபதிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதன்மூலம் எந்த தவறான தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது என முர்சி, நீதிபதிகளுக்கு உறுதி அளித்தார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி அளித்ததாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திர த்திற்கும் நீதிக்குமான கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது. ஆனால் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை என நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது” என ஜனாதிபதியை சந்தித்த நீதிபதிகளில் ஒருவரான அப்துல் ரஹ்மான், ‘பஹ்லுல் அல் மஸ்ரி அல் யூம்’ பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
“ஜனாதிபதிக்கும், நீதிபதிகளுக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்று மற்றுமொரு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையொட்டி ஒருசில நீதிமன்றங்களும் பணிகளை நிறுத்தி ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் மீதான வழக்கு விசாரணை வரும் டிசம்பவர் 4ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE