......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

எந்தவொரு மாகாண சபையும் - தனித்துப் பயணிக்க முடியாது


(thinakaran)திருகோணமலை தினகரன் நிருபர்
கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவொரு மாகாண சபையும், தமது விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள தனித்துப் பயணிக்க முடியாது. அதற்கு எப்போதும் மத்திய அரசின் அனுசரணையையும் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டும்."
என்று நேற்று முன்தினம் செவ்வாயன்று கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது பேரவைக் கூட்ட அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரை யாற்றுகையில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம குறிப்பிட்டார்.
ஆளுநர் மேலும் கூறியதாவது, "இலங்கை அரசியலில் புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கியுள்ள இச்சந்தர்ப்பம் உங்களுக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் வரலாற்றுப் பெருமை மிக்க சிறந்த சந்தர்ப்பம் என்றே நான் கருதுகின்றேன்”
“30 வருட கால கொடூரமான பயங்கரவாத யுகத்தில் ஆயுத பலத்திற்கு பயந்து தமது ஜனநாயக உரிமைகளை இழந்த மக்கள் தற்போது சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அனுபவித்துக் கொன்கின்றனர். “அன்று கிழக்கு மாகாணத்தின் மாவிலாற்றிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை வட பகுதியின் வெள்ள முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பெங்கும் சமாதான ஒளிக்கீற்று பரவியது, மக்கள் தற்போது எந்தவொரு புறச் சக்திகளுக்கு ஆட்படாது சுதந்திரமாக தமது தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுதமேந்திய குழுக்களின் கட்டளைப்படி மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்ற முன்வராதிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் இன்று எந்த ஒரு அச்சுறுத்தலுமின்றி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கி ன்றமை மாகாண மக்கள் பெற்றுள்ள முழுமையான சுதந்திர மற்றும் ஜனநாயக சூழலுக்கு சிறந்த முன் உதாரணமாகும்.
“தற்போது பயங்கரவாத செயற்பாடு களுக்காக சிறுவர்கள் கடத்தப்படுவதில்லை. பொது மக்கள் கப்பம் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை” “சுதந்திர இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் காலம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களின் காலம் வரையான 55 வருட கால இடைவெளியில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் அதிகமான தொகை கடந்த 2008 மதல் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒதுக்கப்பட்டது.
இவ் 2008 முதல் 2011 வரையான காலத்தில் கிழக்கில் அபிவிருத்திக்கு ரூபா 53,000 ஆயிரம் மில்லியன் அதிமேதகு ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.” என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE