......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

62,000பேரை பலியெடுத்தே 13ஆவது திருத்தம் நிறுவப்பட்டது: அதுரலிய

(tamilmirrir)(அழகன் கனகராஜ்)

மக்களின் ஆணையை கொள்ளையடித்தே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 13ஆவது திருத்தம் உயர்நீதிமன்றத்தின் முரண்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கை இந்திய  ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தினால் 62,000 பேர் பலியெடுக்கப்பட்டனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.


தேசிய சுந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து, தேசிய நூலக ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

'பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமையினால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சமாதானமாக பேசுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்நிலையில் மூவின மக்களும் சமாதானமாக வாழ்கின்றனர். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்த வேண்டும். 13ஆவது திருத்தம் 62,000 பேரை பலியெடுத்தே அரசியலமைப்புக்கு முரண்பட்டவகையில் நிறைவேற்றப்பட்டது' என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE