......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

கச்சேரியின் பணிகள் தற்காலிகமாக நாரஹேன்பிட்டிக்கு மாற்றம்


திடீர் தீ விபத்து காரணமாக முற்றாக எரிந்து நாசமாகியுள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் நாரஹேன்பிட்டியவுக்கு மாற்றப்படவுள்ளன.

மாவட்ட செயலகத்தின் பிரதான கட்டடத்திலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ள தால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வரை நாராஹேன் பிட்டியிலுள்ள திம்ரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்க வைக்க தீர் மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தினகரனுக்குத் தெரிவித்தார்.
பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்திரங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள கொழும்பு பிரதேச செயலாளர் அலு வலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளதால் இது தொடர்பான எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்பட வில்லை என்று தெரிவித்த அமைச்சர், பொதுமக்கள் இது தொடர்பில் எதுவித அச்சம் கொள்ளவும் தேவையில்லை என்றார்.
இதேவேளை கொழும்பு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் இன்று முதல் வழமை போன்று செயற்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
இதற்கமைய பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிகள் விநியோகப் பிரிவு, ஓய்வூதியப் பிரிவு, மாவட்ட செயலகத்தின் மறுபக்கத்திலுள்ள சமுர்த்தி, விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரம் மற்றும் புள்ளிவிபர பிரிவுகளும் வழக்கம் போன்று இன்று முதல் செயற்படும் என்றும் மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
முற்றாக தீக்கிரையான மாவட்ட செயலகத்தின் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை வழக்கம் போல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட செயலக, பிரதேச செயலக அதிகாரிகளுக்கும்
ஊழியர்களுக்கும் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இதற்காக பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டார்.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE