தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையில் மாத்திரமே தேசிய இளைஞர் கொள்கை அமுல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த பாரிய குறை அடுத்த வருட மே மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"தேசிய இளைஞர் கொள்கை தயாரிப்பினை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் இளைஞர்களின் வயதெல்லை வித்தியாசமாக காணப்படுகின்றது. இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களே இளைஞர்கள் என கருதப்படுகின்றனர்.
21 மில்லியன் சனத்தொகையினை கொண்ட இலங்கையில் மூன்று ஒன்று பங்கினர் இளைஞர்களாவர். எனினும் இவர்களுக்கு என ஒரு தேசிய கொள்கை இதுவரை இல்லை. கடந்த இரண்டு அரசாங்களின் கால பகுதியில் தேசிய இளைஞர் கொள்கையினை தயாரிப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனினும், குறித்த முயற்சிகள் தோல்லியடைந்தன. தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட விதிமுறைகளில் காணப்பட்ட குறைபாடுகளே தோல்விக்கான காரணமாகும்.இந்நிலையிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்திற்கு அமைய இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இந்நடவடிக்கையினை தற்போது ஆரம்பித்துள்ளது.
இந்த கொள்கையின் ஊடாக நாட்டிலுள்ள இளைஞர்களின் தேவைகளான சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் ஜீவோனபாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த கொள்கை உருவாக்கத்தின் பிண்ணணியில் எந்தவித அரசியல் செல்வாக்கும் இல்லை. வெளிப்படை தன்மை, மக்கள் பங்களிப்பு அனைத்து தரப்பினரது ஆலோசனை ஆகியவற்றினை கொண்டே தேசிய இளைஞர் கொள்கை உருவாக்கப்படவுள்ளது. இதற்காக மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நாளை புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய களுத்தறை, மாத்தறை, மன்னார், நுவரெலியா, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மாத்தாளை ஆகிய மாவட்டங்களில் நாளையும் கொழும்பு, காலி, வவுனியா, மட்டக்களப்பு, மொனராகலை, அனுராதபுரம், புத்தளம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய நாளை மறுதினம் வியாழக்கிழமையும் கம்பஹா, ஹம்பான்தோட்டை, திருகோணமலை, பொலன்நறுவை, பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
இதன்போது வாய்மொழி மூலமாக கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கு மேலதிகமாக தேசிய இளைஞர் கொள்கைக்காக விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ள வினாக்கொத்தை பூர்த்தி செய்து எழுத்து மூலமாவும்www.ou.ac.lk/nypsl என்ற இணையத்தளத்தின் மூலமாக தகவல்களை பெற்று மின்னஞ்சல் ஊடாகவும் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
அத்துடன் தேசிய இளைஞர் கொள்கை தயாரிப்பிற்காக மகரஹமவிலுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் விசேட செயலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த ஊடவியலாளர் மாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழக பதில் உப வேந்தரான பேராசிரியர் ஜானக லியனகம, தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவர் லலித் பியூம் பெரேரா, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் இளைஞர் மாநாட்டில் இலங்கை இளைஞர்கள் சார்பாக கலந்துகொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருணா ராஜசிங்கம், இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதமர் சிஹான் தம்மிக, இலங்கை இளைஞர் சம்மேளத்தின் பொது செயலாளர் சமன் ரணவீர மற்றும் இளைஞர் சிவில் சமூக பிரதிநிதி நூராணி முதலிப் ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்: சுமித் சுதர்ஷன)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.