......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

ஹமாஸ் - இஸ்ரேல் யுத்த நிறுத்தத்தை விரிவுபடுத்த எகிப்து பேச்சு


இஸ்ரேல் - ஹமாஸ¤க்கு இடையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக் கையை விரிவுபடுத் துவது குறித்து எகிப்து மத்தியஸ் தர்கள் இரு தரப்பினரிடமும் தனித்தனியான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

இதில் கடந்த 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கும் காசாவுக்கான தடைகளை தளர்த்துமாறு ஹமாஸ் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எகிப்து மத்தியஸ்தர்கள் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று தற்போதைய யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துமாறு எகிப்து இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காசாவுக்கு இடையில் கடந்த 2006க்கு முன்னர் இருந்த நான்கு பொருட்கள் பரிமா றும் நுழை வாயில்களையும் மீண்டும் திறக்க முயற்சித்து வருவதாக ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் களில் ஒருவரான மஹ்மூத் அல் சஹார் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். இந்த நுழைவாயில்களில் தற்போது ஒரு வாயில் மாத்திரமே செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
167 பலஸ்தீனர்கள் மற்றும் 6 இஸ்ரேலியர்களை பலிகொண்ட இஸ்ரேல் - காசாவுக்கிடையில் 8 தினங்கள் தொடர்ந்த உக்கிர மோதல்கள் கடந்த வாரம் எகிப்து மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது.
(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE