......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

போலி வைத்தியருக்கு அபராதமும் ஒரு வருட சிறையும்

தடை செய்யப்பட்ட கொரெக்ஸ் மருந்து விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை மருந்து விற்பனை நிலையம் ஒன்றில் பரிசோதனை நடத்த முற்பட்ட போலி வைத்தியர் ஒருவரை குற்றவாளியாகக் கண்ட நீதிவான் 10 ஆயிரம் ரூபா அபராதமும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.


கண்டி நீதிமன்ற நீதிவான் ரவீந்திர பிரேமரட்ணவே இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கண்டி நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இவ்வாறு அத்து மீறி உட்புகுந்து கொரெக்ஸ் மருந்து விற்பனை செய்யப்படுகின்றதா என பரிசோதிக்க முற்பட்ட வைத்தியர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு மருந்து விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் இதனையடுத்து தலவாக்கலை பொரலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது அவர் போலி வைத்தியர் என தெரிய வந்துள்ளது.

போலி அரச வைத்தியராக செயற்பட்டமை மருந்து விற்பனை நிலையத்திற்குள் அத்து மீறி பிரவேசித்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் சந்தேக நபரை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு மீண்டும் நேற்று (26/11/12) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிவான் பொலிஸாரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரியைக் குற்றவாளியாகக் கண்டு மேற்படி தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE