நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பு - நிதியமைச்சின் செயலர் பீ. பி. ஜயசுந்தர
நஷ்டத்தில் இயங்கும் சார்மஸ் தானிய களஞ்சிய சபை உட்பட ஐந்து நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் அர சின் திட்டத்திற்கமைய இவ்வைந்து நிறுவனங் களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவது என அரசாங்கம் முடிவு செய் துள்ளது என நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சார்மஸ் தானிய களஞ்சியசாலை, இன்டர் டிரேட் லங்கா தனியார் நிறுவனம், லங்கா டிராக்டர்ஸ் நிறுவனம், சுச்சீ நெப் திட்ட தனியார் நிறுவனம், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் என்பவற்றின் சொத்துக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலர் பீ. பி. ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷவின் கண்காணிப்பின் கீழும் ஆலோசனையின் படியும் பொறுப்பேற்கப்பட்டுள்ள மேற்படி 5 நிறுவனங்களும் மீண்டும் இலாபமீட்டும் நிறுவனங்களாக கட்டியெழுப்பப்படும்.
இதற்கு மேலதிகமாக நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மேலும் 12 நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்காக விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
சைனோ டெக்ஸ் லங்கா நிறுவனம், ஜெக்லங்கா லிமிடட், பிளைமவுன் தனியார் கம்பனி, டீஸ் அப்பரல், ஹைய் பெஷன் காமண்ட்ஸ், ஆதம் ஜீ எக்ஸ்ரெக்ஷன் கம்பனி, வெண்டன் லங்கா கம்பனி, ரீகன் லங்கா கம்பனி, கொம்போசசிட் டவர் சொலியூஷன் கம்பனி, ஹெல்த் பிராம் உற்பத்தி கம்பனி, ஸ்ரீ சிரக் கம்பனி, கொண்டிநேடல் வனஸ்பதி வர்த்தக நிறுவனம் போன்றவை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் விவகாரங்களுக்கென நான்கு சொத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர தெரிவித்தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.