யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்று மாலை மாணவர்களை தாக்க முயற்சித்ததுடன் முரண்பட்டமையால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுடர்களை ஏற்றலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் ஆனந்தகுமாரசுவாமி விடுதியிலும் மாணவர்கள் சுடர்களை ஏற்றியிருந்தனர்.
பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் பிரவேசித்ததை அறிந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது அவர் மீது கல்வீச்சுத் தூக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இராணுவத்தினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினை படம் பிடித்த உதயன் பத்திரிகையின் ஆசிரியர் டி.பிரேமானந் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், உதயன் ஆசிரியர் பிரேமானந் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.