மொபிட்டெல் கோபுரத்தில் பொருத் தப்பட்டிருந்த 8 இலட்சம் ரூபா பெறு மதி வாய்ந்த 5 பெற் றரிகளை களவாடிய சந்தேக நபரை மல்வத்துகிரிபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மீரிகம, தெலிகம பிர தேசத்தில் வசித்து வந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மொபிட்டெல் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த 4 பெற்றரி மற்றும் தீயணைக்கும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதே வேளை இக்களவுடன் தொடர்புடைய மேலும் மூவரை மல்வத்துகிரிபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொபிட்டெல் கோபுரத்தில் பெற்றரி காணாமல் போனதாக மல்வத்துகிரிபிட்டி பொலிஸில் (26) அன்று முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.