......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

பிரசவித்த குழந்தையை கொலைசெய்த இளம் தாய்

By V.Priyatharshan 
கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை கொலை செய்து உடலை மறைத்து வைத்த இளம் தாயொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப்பிரிவு தெரிவிக்கையில்,

24 வயதுடைய இளம் தாயொருவரே பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய கணவர் தொழிலின் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள வேளை, இவர் வேறு ஒரு நபருடன் உறவுவைத்து குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இவ்வாறு பிரசவித்த குழந்தையையே கொன்று உடலை மறைத்துவைத்துள்ளார்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம் தாயை பொலநறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE