......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

பிரபஞ்சத்தின் தொலைவிலிருக்கும் பால்வெளி மண்டலம் கண்டுபிடிப்பு


பிரபஞ்சத்தில் மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு 'MACSO647-JD' என்று பெயரிட்டுள்ளனர்.
எமது சூரியக் குடும்பம் (சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் கோள்கள்) அமைந்துள்ள பால்வெளி மண்டபத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது.

இதைப் போன்று பிரபஞ்சத்தில் சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் காணப்படுகின்றன. அதை வான்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆயிவு நிறுவனமான நாசாவின் "ஹப்பிள்" மற்றும் "ஸ்பிட்ஸர்" தொலைநோக்கிகள் மற்றும் அறிவியல் இதழான "நேச்சர்" அமைந்துள்ள தொலைநோக்கியை ஒருங்கிணைத்து மேற்கொண்ட ஆய்வில் புதிய பால்வெளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
(பெருவெடிப்புக்கப் பின்) பிரபஞ்சம் தோன்றி42 கோடி ஆண்டுகளுக்குப் பின் இந்தப் புதிய பால்வெளி மண்டலம் உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. பூமியில் இருந்து 1330 கோடி ஒளி ஆண்டுகள். தொலைவில் இந்தப் புதிய பால்வெளி மண்டலம் அமைந்துள்ளது. இதற்கு 'MACSO647-JD'என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
'MACSO647-JD'  மண்டலம் மிகவும் சிறியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் அகலம் 600 ஒளி ஆண்டுகள் தொலைவுக்கும் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. எமது சூரியன், பூமி உள்ளிட்ட கோள்கள் அமைந்துள்ள பால்வெளி மண்டலம் 1, 20, 000 ஒளி ஆண்டுகள் தொலைவு அகலமானது.
(thinakran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE