......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 November 2012

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் விபத்து – பயணித்தவர் படுகாயம்


-kattankudi-
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்ததில் ஹோட்டல் கடை ஒன்றுக்குள் மோட்டார் சைக்கிள் புகுந்ததில் கடை மற்றும் கடையிலிருந்த பொருட்கள் சேதமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (7.11.2012) மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியினால் தனது மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் அவ் வீதியின் இடை நடுவில் மனைவியும், மனைவி வைத்திருந்த கைக்குழந்தையும் வீதியில் விழுந்துள்ளனர்.
இவ்விருவரும் வீதியில் விழுந்ததையும் கவனிக்காத கணவர் மோட்டர் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற போது மோட்டர் சைக்கிள் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஹோட்டல் கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
இதனால்  கடை மற்றும் கடையிலிருந்த பொருட்கள் சேதமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த நபரும்  படுகாயமடைந்து காத்தான்குடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE