......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

ஐ. தே. க. ஆட்சி கவிழ்வதற்கு ரணில் - பிரபா ஒப்பந்தமே காரணம்


ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே இலங்கைக்கு போதைப் பொருளும், எயிட்சும், கெஸினோவும் வந்தன என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன் றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்; ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கவிழ்வதற்கு முக்கிய காரணம் ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; 1947 லிருந்து பதவியிலிருந்த அரசாங்கங்கள் வெளிநாட்டமைச்சுப் பதவியுடன் வேறு அமைச்சுக்களை எவருக்கும் வழங்கியதில்லை. ஆனால் மங்கள சமரவீரவுக்கு துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சு வழங்கப்பட்டது.
அவற்றை மங்கள சமரவீரவால் நிர்வகிக்க முடியவில்லை. பின்னர் ஏனைய அமைச்சர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரிடமிருந்து அப்பதவிகள் பறிக்கப்பட்டன.
ஆட்சியிலிருந்த தலைவர்கள் மத்தியில் 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியை எதிர்க் கட்சியினர் மதிக்கத் தவறிவிட்டனர். ஜனாதிபதியின் நடவடிக்கையால் தான் ரணில், சஜித், மங்கள போன்றோர் வடக்கிற்குப் போய் சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் செய்யவும் வழி பிறந்துள்ளது.
இந்திய அரசின் ஒரு இலட்சம் படையினர் வந்தும் சமாதானம் ஏற்படவில்லை. எனினும் ஜனாதிபதியே குறுகிய காலத்தில் நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தினார். சபையில் குரோதம் பொறாமை எரிச்சலுடன் உரையாற்றிய மங்கள சமரவீர பெளத்த விஹாரைக்குச் சென்று உளவியல் ரீதீயில் மனதைச் சரிப்படுத்த உபதேசம் கேட்கவேண்டும்.
வேறு எந்த தலைவர்களுக்குப் போலன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகளவு வெளிநாட்டு எதிர்ப்பும் அழுத்தங்களும் எழுந்தன. நள்ளிரவில் கூட பிரபாகரனுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டாம் என வெளிநாட்டுத் தலைவர்கள் மூலம் அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட காலம் இருந்தது.
எதிர்க் கட்சியில் அரசாங்கம் அமைத்து நிர்வாகம் செய்தவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர். அதனால் அவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. எமது நாட்டிற்கு மட்டுமன்றி மனித குலத்துக்கே நவீன தொழில் நுட்பம் மூலம் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. அபிவிருத்தி போன்ற நல்ல பக்கங்கள் போலவே சிறந்த சமூகங்களைக் கொண்ட நாடுகளின் கலாசார விழுமியங்களைப் பாதிக்கச் செய்வதாகவும் தொழில்நுட்பம் செயற்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் விவசாயிகள் மத்தியில் அதிகரிக்கும்போது பலருக்கு நோய்களும் ஏற்படுகின்றன. விவசாயத்தில் பல செயற்பாடுகள் இப்போது நவீன தொழில்நுட்பம் மூலமே இடம்பெறுகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்ப உபகரணங்கள் உபயோகத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளன.
எமது நாட்டைப் பொறுத்தவரை தொழில்நுட்பங்களின் தீய பக்கங்களை நாம் மிகுந்த கவனத்துடன் அவதானிக்கப்படவேண்டும். குற்றச் செயல்கள் மோசடிகள் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்புகள் பற்றியும் நாம் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது.
ஐ.தே. க வின்17 வருட ஆட்சிக் காலத்திலேயே இலங்கைக்குப் போதை வஸ்தும் எயிட்சும் வந்தன. கெசினோ இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் ஐ.தே.க. ஆட்சியில் தான் இவற்றைப் பார்க்கும்போது ஐ.தே.க . எவ்வாறான ஆட்சியை மேற்கொண்டது என்பது தெளிவாகிறது. ரணில்-பிரபாகரன் ஒப்பந்தமே ஐ.தே. க. அரசின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம். வாழ்க்கைச் செலவு உயர்ந்ததும் அரச சேவையை அலட்சியப்படுத்தி அரச ஊழியர்களை குறைத்ததே ஏனைய இரண்டு முக்கிய காரணங்கள். ஆட்சிக் கவிழ இம்மூன்று விடயங்களே முக்கிய காரணமாயின.
2005 யிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்தமை மட்டுமல்ல. மத்திய மட்ட பொருளாதாரம் வருமானத்தை திருப்திப்படும் வகையில் முன்னெடுத்தமை யும் குறிப்பிடத்தக்கது.
(thinakran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE