......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 19 November 2012

மகப்பேற்று நிபுணருக்கெதிராக மட்டக்களப்பு அரச தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

By Farhan 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதி தாதியர்களுக்கு எதிராக குறித்த விடுதியின் மகப்பேற்று நிபுணர் செய்த முறைப்பாட்டை எதிர்த்து மட்டக்களப்பு அரச தாதியர் சங்கக் கிளை இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 


கடந்த 15ஆம் திகதி நாடளாவியரீதியில் இடம்பெற்ற தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு போரட்டத்தில் கலந்து கொண்டமையை கண்டித்தும் அதேநேரம் அதே விடுதியில் தாதியர்களை கடமை செய்யாது அவர்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் அவர்களை வெளியேறும்படி தமது செயற்பாடுகளை தொடர்ந்து செய்யவிடாது தடுக்கின்றமை நிறுத்தப்படவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு அரச தாதியர் சங்கக்கிளை ஏற்பாடு செய்த இரண்டு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்போது 100க்கும் மேற்பட்ட ஆண்,பெண் அரச தாதியர்கள் 'மட்டு-அரச வைத்தியசாலை தனியார் கம்பனியல்ல", 'தாதியர் சேவை உன்னதமானது",'தாதியர் புறக்கணிப்பை உடன் நிறுத்து", 'தாதிய சேவை அடிமைச் சேவகமல்ல" மற்றும் ' 7ஆம் மகப்பேற்று விடுதியின் பிரச்சினையை உடனடியாகத் தீர்த்துவை" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்ளை ஏந்தி கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் வைத்தியாசாலை நிர்வாகத்தினர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோர் கவனமெடுக்காவிடின் வைத்தியசாலையின் அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் இதற்கான உடனடித் தீர்வை சுகாதார அமைச்சு வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாதியர்கள் தெரிவித்தனர்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE