......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

அமெரிக்காவின் கருத்தை ஏற்க முடியாது!


-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு-
GLPபிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா- ஜெர்மனி மற்றும் சில சர்வதேச அமைப்புக்கள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டுள்ளன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலைமைகளை புரிந்து கொள்ளாமலேயே சில நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு விரோதமான வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கூட அறிந்து கொள்ளாமல் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் இலங்கையை நோக்கும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்திற்கு அமைவான முறையில் சகல சட்டங்களையும் பின்பற்றியே நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.(எம்.ரி.-977)(அரசாங்க தகவல் திணைக்களம்.)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE