......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

ஆச்சரியமானதொரு முடிவு விரைவில் எடுக்கப்படும்: ஹிருணிகா

(tamilmirror)
அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் முடிவொன்றை விரைவில் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர, தனக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
'பாரத லக்ஷ்மனின் ஒரே மகள் நான். எனது தந்தைக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். இந்நிலையில், வித்தியாசமானதும் ஆச்சரியமூட்டுவதுமான முடிவொன்றை விரைவில் எடுக்கவுள்ளேன். கொலன்னாவ மக்கள் எனக்கு என்றும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகின்றேன்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வழக்கு விசாரணையின் பின்னர், நீதிமன்றுக்கு வெளியே வந்த ஹிருணிகா பிரேமசந்திர, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE