இரு நாட்டு மீனவர்களும் ஆண்டொன்றிற்கு தலா 74 நாட்கள் மீன்பிடிப்பது குறித்து யோசனை செய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள் மாத்திரமே மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக்கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க ராகுல் காந்தியின் உதவியை நாடுவோம் என்றும் யுவராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். (தற்ஸ்தமிழ்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.