......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

நவீன போர் விமானத்தை கப்பலில் தரையிறக்கியது சீனா


ஜே-15 ரக நவீன போர் விமானத்தை, சீனா முதன் முறையாக விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
நவீன ரக ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் இப் போர் விமானம் ஜே-15, வானில் இருந்து, கப்பல், வான்வெளி, தரை என அனைத்து வகை இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது.

சீனா வடிவமைத்து உருவாக்கிய இந்தப் போர் விமானம், ரஷ்யாவின் சு-33 ஜெட் வகையைச் சேர்ந்ததாகும்.
இவ்விமானத்தை பல்வேறு கட்ட சோதனைகள், பயிற்சிகளுக்குப் பின்னர் படையில் சீனா இணைத்துள்ளது.
இந்த விமானத்தை “லயோனிங்” விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் முதன் முறையாக தரையிறக்கியும், அதிலிருந்து பறக்கச் செய்தும் தனது வலிமையை உறுதி செய்துள்ளது.
300 மீற்றர் நீள விமானந்தாங்கி போர்க்கப்பல் உக்ரைனில் இருந்து தருவிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த விமானந்தாங்கிக் கப்பல் பயன்படுத்தப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
(thinkaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE