12 மாடிகளைக் கொண்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று காலை தீ விபத்து நேரிட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் சில தொழிலாளர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 120 தொழிலாளர்கள் உயரிழந்த சம்பவம் நேரிட்டு 2 நாட்களில் மற்றொரு தீ விபத்து சம்பவம் நேரிட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.