......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் இலங்கை அகதிகளின் படங்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களுக்காக இலங்கை அகதிகளின் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எவ்வாறேனும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இலங்கை அகதிகளின் புகைப்படங்கள் பயன்படுத்தி வருவதாக அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இன்றி அவதிப்படுகிறார்கள் என்றும் இந்த விவகாரத்துக்கு நரேந்திர மோடியின் அரசு இதுவரை தீர்வு காணவில்லை என்றும் கூறியே காங்கிரஸ் கட்சியினால் இந்த புகைப்படங்கள் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

காங்கிரஸ் கட்சியினால் பயன்படுத்தப்பட்ட மேற்படி புகைப்படங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரினால் இலங்கை அகதி முகாமில் எடுக்கப்பட்ட புடைப்படங்கள் என நரேந்திர மோடியின் குழுவொன்று கண்டுபிடித்து அறிவித்துள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் அச்செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன. (தற்ஸ்தமிழ்) 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE